BJP சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் | Villupuram News Updates

659

BJP சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் :

விழுப்புரத்தில் விழுப்புரம் அரசு நிர்வாகத்தை கண்டித்து நாளை BJP சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் ராஜேந்திரன் இதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளார்

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் உரிமையை பறிக்கும் விதமாக ஆளும் கட்சியின் செயல்பட்டு வருகிறது இதனை கண்டித்தும் அரசு நிர்வாகத்தை கண்டித்தும் பாஜக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

நாளை 24-ஆம் தேதி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற உள்ள இந்த போராட்டத்தில் BJP நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

 

திண்டிவனத்தில் சவ ஊர்வலத்தில் மோதிக் கொண்டவர்கள் மீது வழக்கு பதிவு

திண்டிவனம் அருகே சவ ஊர்வலத்தில் மோதிக்கொண்ட ஊராட்சி ஒன்றிய தலைவி உட்பட 41 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேரை கைது செய்துள்ளனர்.

திண்டிவனம் அடுத்த வைரபுரம் கிராமத்தை சேர்ந்த சாந்தலிங்கம் என்பவர் கடந்த 20 ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது இறுதி ஊர்வலத்தை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்கள் இணைந்து நடத்தினர்.

அந்த இறுதி ஊர்வலத்தில் டிரம்ஸ் அடித்தது சிலர் நடனமாடினர். அதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர். இதில் சுந்தரம், ஏழுமலை, பிரகாஷ், குமரேசன் ஆகியோர் காயமடைந்தனர்.

இதுகுறித்து சுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் 22 பேர் மீது புகார் பதிவு செய்யப்பட்டது. வெள்ளிமேடுபேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிந்து பிரகாஷ் மற்றும் பிரவீன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

 

வீட்டின் கதவை உடைத்து ஒரு லட்சம் கொள்ளை

கண்டமங்கலம் அருகே வீட்டின் கதவை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் மற்றும் நகைகளைத் திருடிய திருடர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

breaking-the-lock-of-the-house-and-stealing in gingee tindianam

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அடுத்த பூஞ்சோலை குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜன். இவர் புதுச்சேரியில் வாழை வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இவர் கடந்த 19ஆம் தேதி காலை வீட்டை விட்டு கொல்லி மலை கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட திருடர்கள் நள்ளிரவு வீடு புகுந்து பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மற்றும் ஒரு சவரன் நகையை திருடி சென்றுள்ளனர்.

வீட்டிற்கு திரும்பிய ராஜன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டதும் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் இதுகுறித்து கண்டமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடிவிட்டு தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்‌.

 

எலக்ட்ரீசியன் தொழிலாளி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பட்டானுார் கிராமத்தை சேர்ந்த தமிழ்வாணன் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் எலக்ட்ரீசியன் தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் இவரை தவிர இவரது குடும்பத்தினர் அனைவரும் ராமேஸ்வரம் சென்று உள்ளனர்.

குடும்பத்தினர் ராமேஸ்வரம் சென்று திரும்பி வந்து பார்த்தபோது தமிழ்வாணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து குடும்பத்தினர் அரோவில் போலீசில் புகார் அளித்தனர். ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

மேலும் இது கொலையா தற்கொலையா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

You might also like