Tatchaseela University : திண்டிவனம் தட்சசீலா பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் தொடக்க விழா

663

Tatchaseela University : திண்டிவனம் தட்சசீலா பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் தொடக்க விழா

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஓங்கூர் தட்சசீலா பல்கலைக்கழகத்தில் பொறியியல், கலை, அறிவியல், வேளாண் அறிவியல், உடற்சிகிச்சை, சுகாதார அறிவியல், ஸ்கூல் ஆப் பார்மசி ஆகிய துறைகளின் 2022- 23-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடந்தது.

இதற்கு பல்கலைக்கழக வேந்தரும், ஸ்ரீமணக்குள விநாயகர்-மயிலம் கல்விக்குழும தலைவருமான தனசேகரன் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக தலைமை செயல் அலுவலர் ராஜராஜன்.

முதன்மை செயல் அலுவலர் டாக்டர் நிலா பிரியதர்ஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துணைவேந்தர் விவேக் இந்தர் கோச்சர், பதிவாளர் செந்தில் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னதாக பொறியியல் துறை டீன் சுப்பிரமணியன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக விர் டுசா கன்சல்டிங் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் தலைவர் சலபதி மேக்கா வெங் எஸ். எஸ். சி.

நாஸ்காம் துணை உதயசங்கர் ஆகியோர் கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வகுப்புகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர்.

இதில் இணை பதிவாளர் ராமலிங்கம், நிர்வாக அலுவ லர் கலைவாணன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கோபாலகண்ணன் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த தலைவர்கள்.

பேராசிரியர் கள், அலுவலர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கலை, அறிவியில் துறை டீன் தீபா நன்றி கூறினார்.

You might also like