Villupuram: விழுப்புரத்தில் மா. கம்யூ மாநில செயலராக சண்முகம் தேர்வு

200

Villupuram: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு கடந்த 3ம் தேதி விழுப்புரத்தில் துவங்கியது. இக்கூட்டத்தில், அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 80 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கட்சியின் விதிகளின்படி மாநிலச் செயலாளரின் வயது 72க்குள் இருக்க வேண்டும். கே. பாலகிருஷ்ணனுக்கு வயது 71 ஆகிறது. இவர் ஆறு ஆண்டுகள் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்தார். இன்று (ஜன. 05) நடந்த கூட்டத்தில், அக்கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், தற்போது அக்கட்சியின் மத்திய குழு மற்றும் செயற்குழு உறுப்பினராக உள்ளார்.

தமிழக மலைவாழ் மக்கள் சங்கம், விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவராகப் பதவி வகித்தவர் ஆவார். கட்சியின் இளைஞர் அமைப்பிலும் பணியாற்றியுள்ளார். சண்முகம், தர்மபுரி வாச்சாத்தியில் பழங்குடியின மக்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்து சட்டப்போராட்டம் நடத்தியவர். கடந்த ஆண்டு தமிழக அரசின் அம்பேத்கர் விருதை முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து பெற்றுக் கொண்டவர்.

You might also like