Gingee: கிராம மக்கள் பஸ் வசதி கேட்டு மறியல்

149

Gingee: வல்லம் ஒன்றியம் கடுகப்பட்டு ஊராட்சியில் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாததால் இந்த கிராம மக்கள் 2 கி.மீ. தூரம் நடந்து வந்து செஞ்சி-மேல்ஒலக்கூர் சாலையில் முக்குணம் கூட்ரோட்டில் பஸ் ஏறுகின்றனர்.

கிராமத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் வெளியூரில் உள்ள பள்ளி கல்லூரிகளில் படிக்கின்றனர். அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் கிராம மக்கள் செஞ்சிக்கு வரும் நிலை உள்ளது. தற்போது கிராமத்திற்கு பஸ் வசதி இல்லை என்பதுடன் கிராம சாலையும் குண்டும் குழியுமாக மாறி உள்ளது.

இதை கண்டித்து கிராம மக்கள் நேற்று (ஜனவரி 4) காலை மேல்ஒலக்கூரில் இருந்து செஞ்சிக்கு செல்லும் அரசு பஸ்சை முக்குணம் கூட்ரோட்டில் நிறுத்தி சாலை மறியல் செய்தனர். தகவல் அறிந்து வந்த செஞ்சி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பஸ் வசதி செய்து தரப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

You might also like