Gold Rate: அட்சய திருதியைக்கு முந்தைய நாள்.. இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம்..

Gold Rate: ஏப்ரல் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.
பல முறை புதிய உச்சத்தை தொட்டு வருவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.
தங்கம் விலை ஒரு கிராம் ரூ.6 ஆயிரம், ரூ.7 ஆயிரமே ஆச்சரியமாக பார்க்கப்பட்ட நிலையில், இந்த வருடத்துக்குள் ஒரு கிராமே இந்த ரூ.10 ஆயிரத்தை தொடும் என்று சொல்லப்படுகிறது.
அந்த அளவுக்கு தினமும் தங்கம் விலை புதிய உச்சம் தொடுகிறது.
நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வரும் தங்கம் விலையால் நகை என்பது சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாகவே அமைந்து விட்டது.
தொடர்ந்து 4 நாட்களுக்கு தங்கம் விலை அதே விலையே நீடித்து வந்த நிலையில், நேற்று சற்று குறைந்தது.
அந்த வகையில் நேற்று (28.04.2025) தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ஒரு கிராம் ரூ.8,940க்கும், சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,520க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று (29.04.2025) தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு கிராம் ரூ.8,980க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 7,435க்கும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 59,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.