Tindivanam : நகராட்சியில் நாய்களை பிடிக்கும் பணி தீவிரம்
Tindivanam : நகரில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து, பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நகர்மன்றக் கூட்டத்திலும் இது பெரும் விவாதப் பொருளாக மாறியது. சமீபத்தில் பள்ளி மாணவர் ஒருவரை நாய் கடித்த சம்பவம், இந்த பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்தியது.
இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியது.
நகராட்சி சுகாதார அதிகாரி செந்தில் மேற்பார்வையில், கிடங்கல் (1) பகுதியில் தெரு நாய்களைப் பிடிக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்தப் பணியை தனியாருக்குக் கொடுத்துள்ளனர். முதல் நாளிலேயே 25 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கை திண்டிவனத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்மூலம், தெரு நாய்களால் ஏற்படும் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று மக்கள் நம்புகின்றனர்.