Villupuram News : பழைய இரும்புக் கடையில் தீ :ரூ.3 லட்சம் பொருட்கள் சேதம்

43

Villupuram News : விழுப்புரத்தில் பழைய இரும்புக் கடையில் தீப்பிடித்ததால் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் எரிந்து சேதமானது.

 

விழுப்புரம், சென்னை நெடுஞ்சாலை கணபதி நகரைச் சேர்ந்தவர் உமர்அலி, 45; இவர், அதே பகுதியில் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். நேற்று காலை 11:45 மணிக்கு கடையில் திடீரென தீ பிடித்து எரிந்தது.

 

விழுப்புரம் தீயணைப்பு நிலையதினர் விரைந்து சென்று 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீயில் இரும்பு கடையில் உதிரி பாகங்களை பிரித்தெடுப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த 2 சரக்கு வேன்கள், 1 டெம்போ எரிந்து சேதமானது. சேத மதிப்பு 3 லட்சம் ரூபாயாகும்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விழுப்புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

You might also like