Lemon Rasam | சுவையான எலுமிச்சை ரசம் ரெசிபி!!

Lemon Rasam | வித்யாசமான & ஈசியான எலுமிச்சை ரசம் ரெசிபி!!
Lemon Rasam : தேவையானவை- எலுமிச்சம் பழச் சாறு – 2 தேக்கரண்டி, தக்காளி – 3, பச்சை மிளகாய் – 1, மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி, பெருங்காயம் – சிறிது, உப்பு – தேவையான அளவு
வறுத்துப் பொடிக்க- சீரகம் – 1 தேக்கரண்டி, தனியா – 1 தேக்கரண்டி, துவரம் பருப்பு – 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் – 2, மிளகு – 1/2 தேக்கரண்டி
தாளிக்க- கடுகு – 1/2 தேக்கரண்டி, எண்ணெய் – 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை – சிறிது, கொத்தமல்லித் தழை – சிறிது
செய்முறை :
பொடியாக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்யவும்.
200 கிராம் பருப்புத் தண்ணீரில் தக்காளி, பச்சை மிளகாய், பெருங்காயம், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கையால் கரைத்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும், பொடித்த பொடியைச் சேர்த்து இறக்கி, இறக்கிய பின் எலுமிச்சம் பழச் சாற்றைச் சேர்த்து கலக்கவும்.
கடைசியாக எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவவும்.
தொப்பை குறைய என்ன சாப்பிட வேண்டும் – Fat Loss
Fat Loss : நமது சமையல் அறையில் இருக்கும் பொருட்கள் எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைந்தவைவாக இருக்கும். அவற்றுள் பூண்டு மற்றும் தேன் ஆகிய இரண்டுமே சக்தி வாய்ந்தவைகள். அவை இரண்டும் சேரும் போது, அவற்றின் பலன் இரட்டிப்பாகும்.
தற்போது பலர் அவதிப்படும் உடல் பருமன் பிரச்சனைக்கு இந்த தேன் பூண்டு கலவை பெரிதும் உதவி புரியும்.
பூண்டு மற்றும் தேன் ஆகியவைகளை எவ்வாறு எடுத்து கொள்ளவது என்பதை பற்றி பார்ப்போம்.
மேலும் படிக்க முழுசெய்தி
நம் திண்டிவனம் Youtube Channel யை Subscribe செய்யுங்கள்.