தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்தது; இன்றைய நிலவரம் இதோ!

12

சென்னை: சென்னையில் இன்று (அக் 06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 280 ரூபாய்க்கும், கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 660 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 3) தங்கம் விலை கிராமுக்கு, 95 ரூபாய் உயர்ந்து, 13,775 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 760 ரூபாய் அதிகரித்து, 1,10,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.வெள்ளி கிராமுக்கு, ஐந்து ரூபாய் உயர்ந்து, 245 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் அதிகரித்து, 2.45 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்றும் (அக் 05) வார தொடக்க முதல்நாளான திங்கள் கிழமை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.இந்நிலையில் இன்று (அக் 06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 280 ரூபாய்க்கும், கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 660 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

You might also like