விழுப்புரம் மாவட்டத்தில் 5ஜி சேவை பி.எஸ்.என்.எல்., நடவடிக்கை எடுக்குமா?

11

தனியார் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க பி.எஸ்.என். எல்; நிறுவனம் 5G சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மத்திய அரசின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மொபைல்போன் சேவை வழங்கப்பட்டு வருகிறது.தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏற்கனவே 5ஜி சேவையை விரிவுபடுத்தி வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பி.எஸ்.என்.எல்., தனது வாடிக்கையாளர்களுக்கு தற்போது வரை 4ஜி சேவையை வழங்கி வருகிறது.தனியார் நிறுவனங்களின் 5ஜி சேவையில் அதிக வேகம், விரைவான இணைய இணைப்பு உள்ளிட்ட வசதிகள் கிடைப்பதால், பொதுமக்கள் அதனை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களில் ஒரு பகுதியினர் தனியார் நிறுவனங்களின் சேவைக்கு மாறும் நிலை எதிர்காலத்தில் ஏற்படலாம்.குறிப்பாக இணையவழி கல்வி, வங்கி பரிவர்த்தனை, ஆன்லைன் அலுவல் பணிகள், வீடியோ அழைப்புகள், அரசு சேவைகளை பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு அதிவேக 5G இணைய வசதி அவசியமாகியுள்ளது.4ஜி சேவையில் சில நேரம் வேகம் குறைவதால், முக்கியமான பணிகளில் நேர விரயம் ஏற்படும்.

எனவே, முதற் கட்டாக விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், திருக்கோவிலூர் போன்ற முக்கிய நகரங்களில் பி.எஸ்.என்.எல்., 5ஜி சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதன் மூலம் நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் மட்டுமின்றி, சுற்றியுள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களும் அதிவேக இணைய சேவையை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும்.குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கும் பொதுத்துறை நிறுவனமான மாக பி.எஸ்.என்.எல்., இருப்பதால் மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் பி. எஸ். என்.எல்., தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தினால் அதிகமான வாடிக்கையாளர்களை புதிதாக உருவாக்க முடியும்எனவே விழுப்புரம் மாவட்டத்தில் 4ஜி வசதியை பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் விரைவாக கொண்டு வர வேண்டும் என இதன் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

You might also like