அமெரிக்க வர்த்தக ஒப்பந்தப் பேச்சில் இந்தியாவுக்கு சாதகம்; நிர்மலா சீதாராமன்.

17

புதுடில்லி: முனீச் தலைவர்கள் மாநாடு டில்லியில் நேற்று துவங்கியது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது, இந்தியா நடத்தி வரும் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து விளக்கினார்.
அவர் பேசியதாவது; பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையில் ஒரு குறிப்பிட்ட நிலையை எட்டியுள்ளோம். இது இந்தியாவுக்கு சாதகமாக இருக்கிறது. வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க அமெரிக்கா விரும்புகிறது.இந்தியா- ஐரோப்பா யூனியன் வர்த்தக ஒப்பந்தம் மிகவும் முதன்மையானது. ஏனெனில், இது உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கையும், 200 கோடி மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.தற்போதைய சூழல் சாதகமாக அமைந்தால், இந்தாண்டுக்குள் 3 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like