Mundiyambakkam: முண்டியம்பாக்கத்தில் குண்டும் குழியுமான மருத்துவமனை சாலை

168

Mundiyambakkam: முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியிலிருந்து போடப்பட்ட தார் சாலை பராமரிப்பு இல்லாததால் மிகவும் மோசமடைந்து குண்டும் குழியுமானது.

தற்போது, கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக குண்டும், குழியுமான சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்சில் வரும் நோயாளிகள், கர்ப்பிணிகள் மேடு பள்ளங்களில் வாகனங்கள் விழுந்து செல்லும் போது அவதிக்குள்ளாகின்றனர். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவ்வப்போது மண்கொட்டி பரப்புவதை தவிர்த்து சாலையை முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

You might also like