விழுப்புரம்: படியில் தொங்கியபடி அடாவடி செய்த மாணவர்கள் – பஸ்சை போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்திய டிரைவர்!

35

Villupuram News : படியில் தொங்கியபடி அடாவடி செய்த மாணவர்கள் – பஸ்சை போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்திய டிரைவர்!

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் இருந்து நேற்று மதியம் விழுப்புரம் நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. விழுப்புரம் பானாம்பட்டு பஸ் நிறுத்தத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் சிலர் பஸ்சில் ஏறினர்.

அவர்கள் பஸ் படியில் தொங்கியபடி பயணித்ததால், தானியங்கி கதவுகளை மூட முடியாமல் சிரமம் ஏற்பட்டது. மாணவர்களை உள்ளே வருமாறு ஓட்டுநரும் நடத்துநரும் கூறியும், அவர்கள் ஒத்துழைக்க மறுத்து அடாவடியில் ஈடுபட்டனர்.

இதனால் அதிருப்தியடைந்த ஓட்டுநர், பஸ்சை நேராக விழுப்புரம் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உள்ள சாலையில் நிறுத்தி, நடத்துநருடன் சென்று புகாரளித்தார்.

உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படியில் நின்ற மாணவர்களை எச்சரித்து பஸ்சிற்குள் செல்ல அறிவுறுத்தினர். இதையடுத்துத் தானியங்கி கதவுகள் மூடப்பட்டு, பஸ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

You might also like