விழுப்புரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் நடுவனந்தல் பொதுமக்கள் மனு!

25

Villupuram News : டாஸ்மாக் கடையை மூடக்கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

திண்டிவனம் அடுத்த நடுவனந்தல் கிராம மக்கள் அளித்துள்ள மனு:

எங்கள் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. குடிமகன்களால் எங்கள் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம் நடத்தினோம். இதன் எதிரொலியாக சட்டசபை நடக்கும்போது, டாஸ்மாக் கடை மூடப்பட்டது. ஆனால், மீண்டும் தற்போது அந்த டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது.

இந்த கடையை மூடுவதற்கு கிராம சபைக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனவே, பொதுமக்கள் நலன் கருதி இந்த டாஸ்மாக் கடையை மூடுவதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

You might also like