விழுப்புரம் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 62 பேருக்கு பணி நியமன ஆணை!
Villupuram News : விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மைய அலுவலகத்தில், மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த மாதத்திற்கான வேலை வாய்ப்பு முகாம் நேற்று காலை 10:00 மணிக்கு துவங்கி மதியம் 2:00 மணி வரை நடந்தது.
இந்த முகாமில், 22 தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்கள் நிறுவனத்திற்காக நேர்காணலை நடத்தினர். இதில், 196 வேலை பேர் கலந்துகொண்டனர். வேலை வாய்ப்பு உதவி இயக்குநர் பாலமுருகன் முகாமை துவங்கி வைத்தார்.
இதில், 5 மாற்றுத்திறனாளிகள் உட்பட 62 பேர், வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக இவர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
மேலும், 19 பேருக்கு இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முகாம் ஏற்பாடுகளை, வேலை வாய்ப்பு அலுவலர் வேல்முருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.