விழுப்புரத்தில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி. பெற RTO அலுவலகம் விழிப்புணர்வு!

40

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், லைசன்ஸ், ஆர்.சி., அட்டைகளை மொபைல் ‘ஆப்’ மூலம் டிஜிட்டல் முறையில் பெறலாம் என வட்டார போக்குவரத்து துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விழுப்புரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள டிரைவிங் லைசன்ஸ், வாகன ஆர்.சி., புக் அட்டைகள், டிஜிட்டல் முறையில் மொபைல் போனில் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு லைசன்ஸ் மற்றும் பிற பணிகளுக்கு வந்திருந்த பொது மக்களிடம் வட்டார போக்குவரத்து அலுவலர்(பொ) முருகவேல், புதிய டிஜிட்டல் முறை லைசன்ஸ் மற்றும் ஆர்.சி., கார்டுகள் பெறும் முறைகள் குறித்தும், அந்த செயலியை பயன்படுத்துவது குறித்தும் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இந்த புதிய நடைமுறை கடந்த, 15ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. பொது மக்கள், இந்த டி.ஜி., லாக்கர் மொபைல் ஆப்பை, தங்களின் மொபைல் போனில் டவுன் லோடு செய்துகொண்டு, அதன் மூலம் டிஜிட்டல் முறையில் லைசன்ஸ் கார்டு, ஆர்.சி., கார்டுகளை தங்கள் மொபைல் போனிலேயே பெற முடியும்.

இனி லைசன்ஸ், ஆர்.சி.,க்கு ஆன் லைனில் விண்ணப்பிப்போர், லைசன்ஸ், ஆர்.சி., டெஸ்ட் பணிகள் முடிந்த பிறகு, இந்த டிஜிட்டல் ஆப்பில் தனது மொபைல் போனில், ஆவணங்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இ-சேவை மையங்களில் பிரிண்ட் எடுத்தும் பயன்படுத்தலாம். இனி, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், லைசன்ஸ், ஆர்.சி., அட்டை பெற காத்திருக்க வேண்டியதில்லை. அதற்கான கட்டணமும் செலுத்த வேண்டாம். இந்த புதிய டிஜிட்டல் முறையை பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.

You might also like