விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சிகள் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளின் முன்னேற்றம், நிர்வாக செயல்பாடுகள் குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். இதில், மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் குடிநீர் வழங்கல், சாலை மற்றும் தெருவிளக்கு வசதிகள், திடக்கழிவு மேலாண்மை, துாய்மை பணிகள், கழிவுநீர் மேலாண்மை உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பேரூராட்சிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும் போர்வெல் மற்றும் நீர் ஆதார மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பருவமழையை முன்னிட்டு மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள் மற்றும் சிறு பாலங்கள் துார்வாரி தயார் நிலையில் வைத்திருப்பதோடு, மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் வைத்திருக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு தெரு நாய்கள் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை பணிகளை மேற்கொண்டது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சரவணன், கால்நடை பராமரிப்புத்துறை உதவி செயற்பொறியாளர் (பேரூராட்சிகள்) சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

38

Villupuram News : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சிகள் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளின் முன்னேற்றம், நிர்வாக செயல்பாடுகள் குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

 

இதில், மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் குடிநீர் வழங்கல், சாலை மற்றும் தெருவிளக்கு வசதிகள், திடக்கழிவு மேலாண்மை, துாய்மை பணிகள், கழிவுநீர் மேலாண்மை உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பேரூராட்சிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும் போர்வெல் மற்றும் நீர் ஆதார மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பருவமழையை முன்னிட்டு மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள் மற்றும் சிறு பாலங்கள் துார்வாரி தயார் நிலையில் வைத்திருப்பதோடு, மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் வைத்திருக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு தெரு நாய்கள் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை பணிகளை மேற்கொண்டது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சரவணன், கால்நடை பராமரிப்புத்துறை உதவி செயற்பொறியாளர் (பேரூராட்சிகள்) சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You might also like