ஆரோவில்லில் சைக்கிள் ரேஸ் 172 வீரர்கள் பங்கேற்பு.

24

Villupuram News : ஆரோவில்லில் சைக்கிள் ரேஸ் 172 வீரர்கள் பங்கேற்பு. வானுார்: ஆரோவில்லில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடந்த ஆரோவில் ‘பை சைக்கிள் சாம்பியன்ஷிப் 2026’ சைக்கிள் ரேஸ்சில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு மற்றும் மெடல் வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில், ஒவ்வொரு ஆண்டும் சைக்கிளத்தான் குழு சார்பில், சைக்கிள் ரேஸ் நடத்தப்படுவது வழக்கம். மூன்றாம் ஆண்டாக சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியும், சைக்கிள் ஓட்டுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று  ஆரோவில் பை சைக்கிள் சாம்பியன்ஷிப் 2026க்கான சைக்கிள் ரேஸ் நடந்தது.அதிகாலை 5:00 மணி முதல் செர்ட்டி டூயூடு வளாகத்தில், இருந்து பல்வேறு பிரிவுகளில் ரேஸ் நடத்தப்பட்டது. இதில் 172 வீரர்கள் பங்கேற்றனர். இடையஞ்சாவடி, புதுச்சேரி – திண்டிவனம் பைபாஸ் வழியாக எறையானுார் மற்றும் தென்கோடிப்பாக்கம் வரை சென்று மீண்டும் மொரட்டாண்டி டோல்கேட் வந்தடைந்தனர்.47 கி.மீ., கொண்ட ஜூனியர் ஆண்கள் பிரிவில், பெங்களூரு சாய் கவுஷிக், ஆரோவில் நளின், விஹன் ஆகியோரும், 65 கி.மீ., ஆண்களுக்கான மாஸ்டர் பிரிவில் சென்னை சுந்தர்ராம், ஆரோவில் சுக்ரித், சென்னை ஜான்பீட்டர் ஆகியோர் முதல் மூன்று இடங்களையும் பிடித்தனர்.65 கி.மீ., கொண்ட ஆண்களுக்கான எலைட் பிரிவில் ஊட்டி ஜோயல் சுந்தரம், பெங்களூரு சவ்ரப் சிங், சென்னை கவிஷ் ஆகியோரும், அமெச்சூர் பெண்கள் பிரிவில் சென்னை ஈஷா குட்டி,  ஹசினி, அக்ைஷ ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.மேலும், 47 கி.மீ., அமெச்சூர் பிரிவில் புதுச்சேரி நாகராஜன், சென்னை தரூன், அக்ைஷ ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.வெற்றி பெற்ற வீரர்களுக்கு, தமிழ்நாடு மிதிவண்டி சங்கத் தலைவர் சுதாகர் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் மெடல்களை வழங்கினார்.

You might also like