அய்யந்தோப்பு கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா.
திண்டிவனம்: அய்யந்தோப்பு கிராமத்தில் நடந்த என்.எஸ்.எஸ்., முகாம் நிறைதிண்டிவனம் வால்டர் ஸ்கடர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் கடந்த 26ம் தேதியிலிருந்து அய்யந்தோப்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.முகாமில் பங்கேற்ற மாணவர்கள் அய்யந்தோப்பு கிராமத்தில் தெருக்களை சுத்தம் செய்தல், கோவில் வளாகம் சீரமைத்தல், புகையிலை ஒழிப்பு குறித்து விழப்புணர்வு ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.நிறைவு நாளான நேற்று காலை அய்யந்தோப்பு கிராமத்தில் தெருக்களில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் ஆம்ஸ்ட்ராங் தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் மோகன், கவுன்சிலர் திருமகள், என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலர் வின்ஸ்டன்மார்க் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், நகராட்சி கமிஷனர் பானுமதி, ரோஷணை இன்ஸ்பெக்டர் ஜோதி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.என்.எஸ்.எஸ்., உதவி திட்ட அலுவலர் ஹரிகிருஷ்ணன், ஆசிரியர்கள் பிரேம்சந்தர், கிறிஸ்டோபர், ஆலன்,ஜெபராஜ், கிருபைசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.வு விழா நடந்தது.