திண்டிவனம் நகராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வாரும் பணி தீவிரம்!

34

Tindivanam News : வடகிழக்கு பருவமழையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் வரத்து வாய்க்காலை  துார் வாரி சுத்தம்படுத்தும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

திண்டிவனம் நகராட்சி சார்பில், வடகிழக்கு பருவமழையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஜாங்குளம் வெள்ளவாரி வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில், ‘பொக்லைன்’ மூலம் துார்வாரி சுத்தம் படுத்தும் பணி நடந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நேற்று அய்யந்தோப்பு வெள்ளவாரி வாய்க்கால் மற்றும் காந்திநகர், வகாப்நகர், வீராங்குளம் பகுதியில் பொக்லைன் மூலம் நீர்வரத்து வாய்க்காலில் துார் வாரி சுத்தப்படுத்தும் பணி, நகராட்சி கமிஷ்னர் பானுமதி, உதவி பொறியாளர் பாண்டு ஆகியோர் மேற்பார்வையில்  நடந்தது.

இதேபோல் நகராட்சி பகுதியிலுள்ள அனைத்து நீர்வரத்து வாய்க்கால்களும் ஒரு வாரத்திற்குள்  துார்வாரி சுத்தப்படுத்தப்படும் என்று நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like