ஆசிய விளையாட்டு போட்டி அப்டேட்; இந்தியா இதுவரை வென்ற பதக்கம் 79.

16

டோக்கியோ: ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 79 பதக்கங்களை (18 தங்கம், 26 வெள்ளி, 35 வெண்கலம்) வென்றுள்ளது.ஜப்பானின் அய்ச்சி – நகோயா நகரில், ஆசிய விளையாட்டு 20வது சீசன் நடக்கிறது. சிய விளையாட்டு நிறைவு விழா நாளை நடக்கவுள்ளது. இதில் இந்திய மூவர்ணக்கொடியை, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை நீரு தண்டா ஏந்தி வர உள்ளார். இவர், இம்முறை 2 தங்கம், ஒரு வெள்ளி என, மூன்று பதக்கம் கைப்பற்றி இருக்கிறார்.இந்நிலையில் இன்று (அக் 03) வில்வித்தையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது; தனி நபர் பிரிவில் இந்திய வீராங்கனை குங்கும் மோஹோத் தங்கம் வென்றார். இவர் கொரியாவின் ஓ யே ஜினை 6-5 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

18வது தங்கம்!

கோல்ப் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பிரனவி உர்ஸ் தங்கம் வென்றார்; ஆசிய விளையாட்டின் கோல்ப் போட்டியில் இந்திய வீராங்கனை தங்கப்பதக்கம் வென்று இருப்பது இதுவே முதல் முறையாகும். அதேபோல் கோல்ப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளி வென்றது.

பதக்கப்பட்டியல்!
இந்தியா இதுவரை 79 பதக்கங்களை வென்று பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளது.

* தங்கம்- 18

* வெள்ளி- 26

* வெண்கலம்- 35

You might also like