ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா அபாராம்; இன்று ஒரே நாளில் 3 தங்கம்!

19

டோக்கியோ: ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாஹில் ஜாதவ், சிகிதா தனிபார்த்தி ஜோடி மற்றும் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றுள்ளது. துப்பாக்கி சுடுதல் டிராப் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நீரு, கியான் செனாய் ஜோடிக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. ஒரே நாளில் இந்தியவுக்கு 3 தங்கம் கிடைத்துள்ளன.ஜப்பானின் அய்ச்சி-நகோயா நகரில் ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இன்று (செப்.30) மகளிர் வில்வித்தை காம்பவுண்ட் பிரிவில் இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இறுதிப்போட்டியில் சீனாவுக்கு எதிராக 238-234 என்ற புள்ளிகள் கணக்கில், இந்தியாவின் சிகிதா தனிபார்த்தி, பிரித்திகா பிரதீப், ஜோதி சுரேகா அடங்கிய அணி வெற்றி பெற்றது.

மேலும் ஒரு தங்கம்

வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாஹில் ஜாதவ், சிகிதா தனிபார்த்தி ஜோடிக்கு தங்கப்பதக்கம் வென்றது. ஏற்கனவே இந்திய மகளிர் அணி தங்கம் வென்றுள்ளது. ஒரே நாளில் வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. தென்கொரியாவை 158-157 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வீழ்த்தியுள்ளது.
இன்னொரு வெண்கலம், தங்கம்

60 கிலோ எடைப்பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனை பிரியா கங்காஸ் வெண்கலம் வென்றார்; துப்பாக்கி சுடுதல் டிராப் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நீரு, கியான் செனாய் ஜோடிக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.டிராப் ஒற்றையர் பிரிவில் நீரு ஏற்கனவே தங்கம் வென்றுள்ளார்.

பதக்கப்பட்டியல்!

இந்தியா பதக்கப் பட்டியலில் 8ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுவரை 57 பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றுள்ளனர்.

* தங்கம்- 9

* வெள்ளி- 21

* வெண்கலம்- 27

You might also like