Accident Free Diwali Awareness For Girl Students : விபத்தில்லா தீபாவளி: மாணவிகளுக்கு விழிப்புணா்வு.

190

Accident Free Diwali Awareness For Girl Students : விபத்தில்லா தீபாவளி: மாணவிகளுக்கு விழிப்புணா்வு.

விழுப்புரம் தீயணைப்பு, மீட்பு நிலையம் சாா்பில் விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி விழுப்புரம் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலா் ந. பாஸ்கரன், மாவட்ட உதவி அலுவலா் கே. சிவசங்கரன் ஆகியோரது அறிவுறுத்தலின்படி, விழுப்புரம் தீயணைப்பு நிலையத்தினா் பாதுகாப்பான தீபாவளி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக, விழுப்புரம் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தீயணைப்புத் துறை வீரா்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது, தீ விபத்து தடுப்பு குறித்து செயல் விளக்கமளித்தும், துண்டறிக்கைகள் வழங்கியும் மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

You might also like