விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

39

Villupuram News : விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில், மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் விழுப்புரம் மற்றும் வானூர் சட்டசபை தொகுதிகளுக்கான செயற்குழு கூட்டம் லட்சுமணன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. வானூர் எம்.எல்.ஏ. கவுதம் வரவேற்புரை ஆற்றினார். புதுச்சேரி மாநில அமைப்பாளர் சிவா, மாநில மாணவரணி செயலாளர் வீரமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் கட்சி மறுசீரமைப்பு பணிகள் குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

  • சட்டசபையில் மாண்பினை குறைக்கும் வகையில் பேசியதாக முதல்வர் விஜய்க்கு வன்மையான கண்டனம்.

  • வரும் 15-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் முப்பெரும் விழாவில் திரளாகப் பங்கேற்பது.

  • மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றிக்கு தீவிரமாகப் பணியாற்றுவது.

இக்கூட்டத்தில் மாவட்டப் பொறுப்பாளர்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அணி அமைப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

You might also like