வளவனூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலி !

48

Vanur News : விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே நடந்த சாலை விபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஐவேலி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (75) என்ற விவசாயி, நேற்று வளவனூர் அருகே உள்ள மாதிரிமங்கலம் பகுதியில் சென்னை – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்குப் பின்னால் ஒரே திசையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக ராமச்சந்திரன் மீது மோதி விட்டு நிற்காமல் தப்பிச் சென்றது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து வளவனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய வாகனத்தையும் அதை ஓட்டிச் சென்ற நபப்பையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

You might also like