இலவச சமையல் கேஸ் சிலிண்டர் எப்போது கிடைக்கும்?
TVK NEW:தவெக தேர்தல் வாக்குறுதியான “அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்” திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு 6 சிலிண்டர்களை இலவசமாக வழங்க சுமார் ரூ.6,000 வரை தேவைப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழகத்தின் தற்போதைய நிதிநிலை மற்றும் கடன் சுமையை கருத்தில் கொண்டு, இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவது பெரும் சவாலாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.