Mailam | ADMK ஆலோசனைக் கூட்டம்

1,165

Mailam | பூத் கமிட்டி முகவர்கள் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம்

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மயிலம் கிழக்கு ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டி முகவர்கள் அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்டம் மயிலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சேவல் T. D. சேகரன் தலைமையில் மயிலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டத்தில் எம் எல் ஏக்கள் சக்கரபாணி, அர்ஜுனன், மயிலம் மேற்கு ஒன்றிய செயலாளர் புலியனூர் விஜயன், மரக்காணம் மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஜெய பிரகாஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், மற்றும் கிழக்கு ஒன்றிய அதிமுக பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நம் திண்டிவனம் Youtube Channel யை Subscribe செய்யுங்கள்

You might also like