Taluka office : திறப்பு விழாவிற்கு தயாரான புதிய தாலுகா அலுவலகம்

164

Taluka office : திண்டிவனம் நேரு வீதியில் தாலுகா அலுவலகம் நுாற்றாண்டு பழமை வாய்ந்த கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. குறுகிய, போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத இடத்தில் செயல்படுகிறது. இந்த அலுவலக வளாகத்தில் வட்ட வழங்கல் அலுவலகம், தேர்தல் பிரிவு அலுவலகம், முதியோர் உதவி பெறும் அலுவலகம், கூட்டம் நடக்கும் ஹால் என அனைத்தும் அமைந்துள்ளது. தாசில்தார் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கும், பொதுமக்களுக்கும் கழிப்பறை வசதி இல்லாமல் இருப்பதால், பலர் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தனர்.

பழைமை வாய்ந்த கட்டடம் என்பதால் அடிக்கடி வட்ட வழங்கல் அலுவலகத்தின் மேற்கூரை காரை பெயர்ந்து விழுந்து, பணியாளர்களை அச்சுறுத்தி வந்தது எந்த வசதி இல்லாமல் செயல்படும் அலுவலகத்தை இடித்துவிட்டு, அதேஇடத்தில் அடிப்படை வசதிகளுடன் புதியதாக தாலுகா அலுவலகம் கட்ட வேண்டும் என ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர் பொதுப்பணித்துறை சார்பில் புதிய அலுவலகம் கட்டுவதற்காக 4. 75கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, அலுவலகத்தின் முன்பகுதியிலுள்ள தாசில்தார் அலுவலகம் தவிர, பின்புறம் இருந்த அனைத்து பழைய கட்டடங்களும் இடித்துவிட்டு, புதிதாக 2 மாடிகளுடன் கூடிய அலுவலகத்தை கட்டும்பணி, கடந்த 1 ஆண்டாக நடந்து வந்தது. தற்போது பணிகள் அனைத்தும் முடிவடையும் தருவாயில் உள்ளது. அடுத்த மாதத்தில் திறக்கவாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like