Agriculture: வல்லத்தில் வேளாண் விழிப்புணர்வு வாகனம் எம்.எல்.ஏ துவக்கி வைப்பு

Agriculture: விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, வல்லம் வேளாண் விரிவாக்க மையத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். தி. மு. க. , ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.
வேளாண் உதவி இயக்குனர் பாலமுருகன் வரவேற்றார். மயிலம் தொகுதி எம். எல். ஏ. , சிவக்குமார் விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் கோபால், துணை வேளாண் அலுவலர் கோவிந்தராஜ், உதவி வேளாண் அலுவலர்கள் ஹரிதாஸ், செண்பகவள்ளி, மஞ்சு, தமிழரசி, அபிராமி, ஜீவா, கிடங்கு மேலாளர் உமா மற்றும் தி. மு. க. , பா. ம. க. , நிர்வாகிகள் பங்கேற்றனர்.