வராண்டாவில் படிக்கும் மாணவர்கள்: விழுப்புரம் பள்ளி மாணவர்களின் பரிதாப நிலை

46

Villupuram News : விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால், மாணவர்கள் வராண்டாவில் அமர்ந்து படிக்கும் அவலம் தொடர்கிறது. இப்பள்ளியில் 585 மாணவர்கள் பயின்று வரும் நிலையில், மொத்தம் 9 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. கொரோனாவிற்குப் பின் மாணவர் சேர்க்கை அதிகரித்ததால், 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையின்றி வராண்டாவிலும், படிகளின் கீழும் அமர்ந்து படிக்கின்றனர்.

மாவட்டத் தலைமையகத்தில் உள்ள இப்பள்ளியில் பெயர் பலகை கூட இல்லை. மேலும், சாலையோர ஆக்கிரமிப்புகளால் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதில் கடும் சிரமப்படுகின்றனர். எனவே, மழைக்காலம் தொடங்குவதால் மாணவர்கள் படும் அவதியைக் போக்க, கூடுதல் வகுப்பறைகளைக் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like