NOTA : இடைத்தேர்தலில் 859 வாக்குகள் நோட்டாவிற்கு பதிவு

NOTA : விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை நேற்று (ஜூலை 13) பனையபுரம் அரசு பள்ளியில் நடைபெற்றது. இந்நிலையில் 29 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுக வேட்பாளர் சிவா வெற்றி பெற்றார்.
யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என கூறப்படும் நோட்டாவிற்கு 859 வாக்குகள் இந்த தேர்தலில் பதிவாகி உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் 1299 வாக்குகல் பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.