Vikravandi : திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

Vikravandi : விக்கிரவாண்டி அடுத்த வி. சாலையில் திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கோவில் கும்பாபிேஷகம் நடந்ததை முன்னிட்டு நடந்த திருக்கல்யாண உற்சவத்தில், அர்ஜூனன் – திரவுபதி அம்மன் கல்யாண அலங்காரத்தில் கிருஷ்ணன் முன்னிலையில் திருமணம் நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தை முன்னுார் சரவணன் குருக்கள் செய்திருந்தார். இரவு சுவாமி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை வி. சாலை கிராம மக்கள் செய்திருந்தனர்.