மயிலம் : பூச்சி மருந்து குடித்த விவசாயி

336

Mailam News : மயிலம் அருகே குடும்பத் தகராறு காரணமாக பூச்சி மருந்து குடித்த விவசாயி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் பரத்குமார் (28). விவசாயியான இவருக்குத் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில், தம்பதியினருக்கு நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லாத காரணத்தால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் மனமுடைந்த பரத்குமார், கடந்த மாதம் 17-ஆம் தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துத் தற்கொலைக்கு முயன்றார். உயிருக்குப் போராடிய அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குத் தீவிர சிகிச்சை பெற்று வந்த பரத்குமார், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து மயிலம் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like