விக்கிரவாண்டி ரயில் நிலையம் எதிரே நடை மேம்பாலம் பணி.

20

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வெங்கடேஸ்வரா நகர் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று சப் -வேக்கு பதிலாக நடை மேம்பாலம் அமைக்கும் பணியை நகாய் ஈடுபட்டுள்ளது.விக்கிரவாண்டி பேரூராட்சியில் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உள்ள மக்கள் பைபாஸ் சாலையை கடந்து செல்ல சப் -வே அமைக்க வேண்டும் என நகாய்க்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் தற்பொழுது வடக்கு பை பாஸ் முனையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருவதால் சப்-வே அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

பொதுமக்கள் கோரிக்கை கருத்தில் கொண்டு இப்பகுதியில் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல நடை மேம்பாலம் அமைக்க நகாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தற்போது நடை மேம்பாலம் ரயில்வே ஸ்டேஷன் எதிரே அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப் பணியை திண்டிவனத்தை சேர்ந்த ஆர்.கே.கன்ஸ்டிரக் ஷன் நிறுவனத்தார் செய்து வருகின்றனர்.தற்போது பைபாஸ் சாலை நடுவில் நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு இரு புறமும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி நிலுவையில் உள்ளது.இன்னும் ஒரு வார காலத்திற்குள் பணி நிறைவடையும் என ஒப்பந்ததாரர் தெரிவித்துள்ளார்.

You might also like