தமிழக அரசு பணிக்கு புதுச்சேரி பதிவெண்: ‘ஜீப்’கலெக்டர் அலுவலக அலுவலர்கள் அதிருப்தி.

13

தமிழகத்தில் அரசு அலுவலர்களுக்கு அரசு சார்பில் கார், ஜீப்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலர்களுக்கும் இந்த வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. சில துறைகளுக்கு வாகனங்கள் வழங்கவில்லை என்றால், காண்ட்ராக்ட் அடிப்படையில் வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில், அரசு வழங்கும் கார்களில் பதிவெண்ணில் ‘ஜி’ என அச்சிடப்படும். காண்ட்ராக்ட் வாகனங்களில் ஆன் காண்ட்ராக்ட் என அச்சிட்டு பயன்படுத்தப்படும்.இந்நிலையில், விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தியுள்ள புதுச்சேரி பதிவெண் கொண்ட பொலீரோ ஜீப்பில் தமிழக அரசு என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் அரசு அலுவலர்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வரும் நிலையில், புதுச்சேரி பதிவெண் கொண்ட வாகனத்தை எந்த துறையை சேர்ந்த அலுவலர்கள் பயன்படுத்துகின்றனர் என தெரியாமல் கலெக்டர் அலுவலக அலுவலர்கள் குழம்பிவருகின்றனர்.மேலும், இந்த வாகன பதிவெண் ஒட்டப்பட்டுள்ள வெள்ளை நிற ஸ்டிக்கர் பெயர்ந்து காணப்படுகிறது. அந்த ஸ்டிக்கருக்குள், வாடகை வாகனம் நிறமான மஞ்சள் நிறத்தில் பதிவெண் ஒட்டப்பட்டுள்ளது லேசாக தெரிகிறது. இது அரசு அலுவலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழக அரசு பணியில் புதுச்சேரி வாகனம் பயன்படுத்துவதை தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

You might also like