Cycle : அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

155

Cycle : விக்கிரவாண்டி ஒன்றியம் தும்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு டி.இ.ஓ. இளமதி தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் கேசவன் வரவேற்றார்.

விக்கிரவாண்டி தொகுதி எம். எல். ஏ. , அன்னியூர் சிவா மாணவ, மாணவிகள் 175 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் ரவி, ஒன்றிய கவுன்சிலர் செல்வம், மாவட்ட பிரதிநிதி வேல்முருகன், கண்காணிப்பு குழு எத்திராசன், இலக்கிய அணி கலைச்செல்வன், கல்விக் குழு ஜெயபால், மோகன்ராஜ், சரவணன், சந்தோஷ், பாலகிருஷ்ணன் உள்பட கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

You might also like